Thursday, January 28, 2016

மனித நேயம்...

அவனுக்கு அந்தப் பேருந்துப்பயணம் வெறுப்பையும், சலிப்பையுமே தந்திருக்க வேண்டும். பேருந்தில் பயணித்து, பயணித்து அவனுக்கு வாழ்வே வெறுத்துப் போயிருந்தது. பேருந்து இரைச்சலோடு தொலைக்காட்சியின் அலறல் வேறு. இப்பொழுதெல்லாம் நம்மவர்களுக்கு வண்ணத்திரைப் பேருந்து தான் மிகவும் பிடித்தது. ஆனால் அவன் மதுரைக்கு வந்து இறங்கியதும் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற உணர்வை பெற்றிருந்தான்.
அவன் கோவையிலுள்ள அனாதை மற்றும் குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் மறுவாழ்வு மையத்தில் ஊர் ஊராகச் சென்று " குழந்தைகள் நலநிதி " திரட்டுகின்ற பணி. அதற்காகவே அவன் இப்பொழுது மதுரைக்கு வந்திருக்கிறான்.
அவன் பேருந்து நிலையத்திற்கு வந்த பிறகு மதுரை மாநகர் என்பதற்கு அடையாளமாக மக்கள் கூட்டமும், " கொய்யா! அம்மா! " என்றும் வெள்ளரி, திராட்சை என வியாபாரிகளின் குரல் ஒரு பக்கமும் அவனுக்கு தென்பட்டன.
இடிக்குப் பயந்து மரத்தில் ஒதுங்கிய கதையாக, பேருந்திலிருந்து தப்பித்தவன், மதுரை மாநகரின் வெயிலுக்கு தப்பிக்க இயலவில்லை. வெயில் தனது கொடூரத்தை மக்களுக்கு காட்டிக் கொண்டிருந்தது.
இருந்தாலும், வந்த வேலையை அவன் தொடங்க நினைத்தான். தனது கைப்பையிலிருந்து உண்டியலையும், துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தான். ஏதோ, போட வேண்டும் என்பதற்காக உண்டியலில் சில்லறைகளைப் போட்டவர்களே ஏராளம். இறக்கத்தோடு போட்டதாக ஒருவரும் தென்படவில்லை.
ஒரு சிலர், நின்று கூட துண்டு பிரசுரங்களை வாங்காமல் நடந்து கொண்டிருந்தனர். அவன் தன் வேலையை நன்றாகத் தான் செய்தான். அவன் நிதி திரட்டிய விதத்தை கண்டால், இந்தியாவின் கடனைப் போக்க உலக நாடுகளிடம் இப்படி நிதி திரட்டினால் கடனை அடைத்து விடலாம் என்று எண்ணத் தோன்றும்.
உண்டியலுக்கு இன்று நல்ல வேட்டை உண்டியல் குலுக்கியே இந்த நாட்டை உண்டு இல்லை என்று தீர்த்தார்கள் என்பது உண்மைதான் போலும்.
இந்நிலையில், வெயிலின் கொடூரத்தை அவனால் தாங்க இயலவில்லை. ஏதாவது "ஜில்" என்று குடித்தால் தான் நிற்க முடியும் போல இருந்தது அவனுக்கு.
அவனுடைய நாவின் சுரண்டலுக்கு உண்டியலைச் சுரண்டலாம் என எண்ணினான். உண்டியலில் பணத்தை எடுத்தால் யாருக்கு தெரியப் போகிறது?
உண்டியலில் இருந்து கொஞ்சம் சில்லறைகளை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஒரு "பழச்சாறுக்" கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி குடித்துக் கொண்டிருக்கும் போது, கைகளில் யாரோ சுரண்டுவது போல ஓர் எண்ணம்.
திரும்பிப் பார்த்தான் அவன். பரட்டைத் தலையுடனும், கிழிந்த ஆடையுடனும் ஒரு சிறுமி "அண்ணே! பசிக்குது ஒரு ரூபாய் இருந்தா தாங்க!" என்று அழுகையுடன் கலந்த குரலில் கேட்டாள்.
"இல்லை, இல்லை போ. பஸ் ஸ்டாண்ல நிம்மதியாக நிக்க முடியல அதுக் குல்ல இதுக தொல்லை" என்றான் அவன்.
" இது குழந்தைகளுக்கு திரட்டிய நிதியா? இல்லை இவன் குளிர்பானம் குடிக்க திரட்டிய நிதியா?" தனக்குள்ளேயே கேள்வி கேட்டுக் கொண்டது உண்டியல்.
அவன் அந்த சிறுமியை தூரத் தள்ளி விட்டு உண்டியலை பைக்குள் வைத்துவிட்டு பேருந்தில் ஏறி கோவைக்கு பயணமானான். பேருந்து மதுரையை விட்டுச் சென்றது.
பிறகு, சென்னை, சேலம், திருச்சி என பல ஊர்களில் வசூல் செய்து விட்டு மீண்டும் ஒரு மாதம் கழித்து அவன் மதுரைக்கு வந்தான்.
மதுரைக்கு வந்தால் அவனது மனதிற்கு ஏதோ, ஒருவித ஆறுதல். அதற்கு காரணம் இப்படியும் கூட இருக்கலாம். மதுரைக்கு வந்தால் நிதி வசூல் கொஞ்சம். அதிகமாக கிடைக்கும். தமிழ் வளர்த்த மதுரையில் மக்கள் தமிழை மறந்து விட்டாலும், தமிழர் பண்பாடான அறத்தை கொஞ்சம் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் போல.
எப்படியோ அவன் இன்றும் வசூலை முடித்து விட்டு புறப்படலாம் என்று எண்ணினான் இன்றும் தாகம், அவன் நடக்க இயலவில்லை. இன்றும் உண்டியலில்லிருந்து சில்லறையை எடுத்துக் கொண்டு குளிர்பானக் கடைக்குப் போனான்.
அந்த சிறுமி இன்றும் கையில் குழந்தையுடன் அவன் எதிரே ஓடி வந்தாள்.
"அண்ணே! எனக்காக இல்லாட்டினாக் கூட பரவாயில்லை. இந்த பாப்பா பசியால அழுகிறது இதற்காகவாவது கொடுங்க" என்றாள்.
"அன்னைக்கும் வந்து தொல்லை கொடுத்த இன்னைக்கு இந்த குழந்தையோடவா? என்ன நீங்க எல்லாம் ஒரு கூட்டமா திரியிறீங்களா?" என்றான்.
"இல்லை, அண்ணே" என்ற மறுதலித்தாள்.
"பிறகு யாரு இது?" என்றான் அவன்.
" ஒரு வாரத்துக்கு முன்னாடி இந்த பஸ்டாண்ல ஒரு ஆக்சிடன்ட் (விபத்து) நடந்தது அதுல எல்லாரும் செத்து போனாங்க அதுல தப்பிச்சுகிட்டது இந்த பாப்பா மட்டுந்தான். யாரும் இவளை தூக்கல; நான் தான் இவளை தூக்கி நான் பிச்சை எடுக்கிற காசுல இவளுக்கு சாப்பாடு கொடுக்கிறேன்" என்றாள்.
அவனுக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்தது. உண்டியலிலிருந்து கொஞ்சம் காசை அவளுக்கு எடுத்து தந்துவிட்டு புறப்பட்டான்.
இன்னும் கூட "மனிதநேயம்" மக்களிடம் பிச்சைகேட்டு கொண்டு தான் இருக்கிறது. பணத்திடம் மனம் இருப்பதில்லை; மனிதத்திற்கு மதிப்பு இருப்பது இல்லை. (மனித நேயம், மனித நேயம் என்று பல முறையும் மக்களிடம் சொல்லியும் மறந்து போன கதை இது.)

மாற்றம்

தன் முன்னால் தரையில் அமர்ந்து, கதறியழும் வயதானப் பெண்ணை, மாவட்ட ஆட்சியாளர் இந்துவால், தேற்ற முடியவில்லை.
பக்கத்தில் உள்ள, ஒரு சிறு கிராமத்திற்கு நிதியுதவி செய்யச் சென்றபோதுதான், அந்தப் பெண்மணி, அவளது காலில் விழுந்து அழுதாள்.
ஏன் அழுகிறாள்? தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்துவிட்டு, பல நாட்களாய் சிறுகச், சிறுகச், சேர்த்த காசைக் கொண்டு, தன் மகளுக்கு நகை வாங்க நகருக்குச் செல்லும்போது, எவனோ ஒரு பிட்பாக்கெட்காரன் இரக்கமின்றி எடுத்துவிட்டான்.
இந்த சம்பவத்தைக், கேட்டுக் கொண்டிருக்கும் இந்துமதியின் மனம் பதினைந்து ஆண்டுகளுக்கு, முன்பு நடந்த நிகழ்வுக்கு சென்றது.
எல்லா மரங்கள், செடிகளும், கொடிகளும், முதுமைக்கு விடைகொடுத்து, இளமையைச் சந்திக்கக் காத்திருக்கும், மார்கழி மாதம் அது. மருதாணியின் வெளுப்பைப் போல், இன்றும் வழக்கமாக சூரியன் வெளுத்தான் சற்று தாமதமாக...
பட்டனை அழுத்தியவுடன் இயங்குகின்ற இயந்திரமாய், மணி அடித்தவுடன், மாணவர்களின் சலசலப்போடு புது கிளுகிளுப்போடு, வகுப்பறை ஆரம்பித்தது. அது அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். அன்று ஆறாம் வகுப்பு ஆசிரியர் கார்த்திகேயன், வரவில்லை. ஆசிரியர் வரவில்லையென்றால் சொல்லவேண்டுமா? அவ்வளவு தான் ஒருவர். ஒருவரின் குடுமியைப் பிடித்தும், அடித்தும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஏ குண்டு, கொழுக்கட்டை, கருவாச்சி என ஒருவர், மற்றவரை அவர்களது பட்டப் பெயர்களால் அழைக்கலாயினர். ராஜேஸ்வரியின் தந்தை, சிங்கப்பூரில் இருக்கிறார். தினமும் விதவிதமான, உடையுடன், பள்ளிக்கு வருவாள். இவளது அருகில் பள்ளியில், அமர்ந்து இருப்பவள் இந்துமதி. அவளது தந்தை சிறு வயதில் இறந்துவிட்டார். எனவே அவளது அம்மாவும், இரண்டு தங்கச்சிகளும், தான் இவளுக்குப் பெரிய சொத்து. இவளது அம்மாவினுடைய உழைப்பில் தான், குடும்பம் நடக்கிறது.
இவளது அம்மா இலட்சுமியம்மாள் பஞ்சு ஆலையில் வேலைப் பார்க்கிறாள்.
வழக்கம் போல், ராஜேஸ்வரி தனது தந்தை சிங்கப்பூரில் இருந்து கொண்டுவந்த, பேனாவை வைத்துப் பெருமையடிக்கத் துவங்கினாள்.
ஐயா! எங்கப்பா சிங்கப்பூர்ல இருந்து கொண்டுவந்த சிங்கப்பூர் பேனா, சிவப்பு மை பேனா, பார்த்தியா? எவ்வளவு அழகா, இருக்குன்னு.
வறுமை இந்துவின் வார்த்தைகளுக்குத் தாழிட்டது, இருப்பினும்.
ஏப்பா! ஏப்பா! இதை எனக்குத் தர்றியா? என ராஜியிடம் கேட்கிறாள்.
ராஜி... ம்ம் அசுக்குப், பிசுக்குப், போடி உனக்குத் தரமாட்டேன், என்று சொல்லி அவளைத் தொடக்கூட அனுமதிக்கவில்லை.
"பணக்கார வர்க்கத்தை வேடிக்கைப் பார்த்து, ஆசையை அடக்கிக் கொள்வதை, வாடிக்கையாக்க வேண்டும்." என்பது, அந்தப் பிஞ்சு நெஞ்சத்திற்குத் தெரியவில்லை.
ரொம்பப் பீத்திக்காதடி, நானும் எங்கம்மாக்கிட்ட இந்த மாதிரி பேனா, வாங்கிக் கேப்பேன்னு தேம்பித் தேம்பி சொல்லிக் கொண்டே அழுகிறாள்.
இந்துவின் வீடு, பள்ளியில் இருந்து சற்று தூரத்தில் உள்ளது. மாலையில் பள்ளி முடிந்ததும், வீட்டிற்குச் செல்லும்போது, வழியோரம் காணப்படும் கருவை மரங்களின் இலைகளையும், மஞ்சள் பூக்களையும், உதிர்த்து, உதிர்த்து, அவைகளிடம் தனது கோபத்தைக் காட்டிக் கொண்டே போனாள்.
வீட்டை அடைந்ததும், அவள் தனது பையை ஒரு மூலையில் வீசி எறிந்துவிட்டு, பக்கத்து வீட்டுக்குத் தொலைக்காட்சிப் பார்க்கச் சென்று விட்டாள்.
இந்துமதியின் தாய் ஆலையை விட்டு வந்ததும், "இந்து, இந்து", என அழைக்கவே அவளைக் காணவில்லை மறுமுறை "இந்து, இந்து" என அழைக்க...
"அம்மாக் கத்துறது ஊருக்கேக் கேட்கும் போல, ச்சே செத்த நேரம் கூட நிம்மதியாப் படம் பார்க்க முடியல, என முனங்கியவாறே", வீட்டிற்குள் நுழைந்தாள்.
"நானே ஒத்தக் கையாளு, பொம்பளப் பிள்ளை கொஞ்சம் ஒத்தாசையா இருக்கக் கூடாது", எனக் கூறிவிட்டு சமைக்கத் துவங்குகிறாள்.
இந்துமதி அம்மாவிடம் தயங்கிக் கொண்டே, " அம்மா, அம்மா இந்த இராஜிப் பிள்ளை வச்சிருக்கிற பேனா மாதிரி எனக்கு வாங்கித்தர்றியாம்மா?"
"யாருடி இவ, வேற வேலையில்லை பெரிய இடத்துப் பிள்ளைங்க அப்படி, இப்படின்னு, வச்சிருப்பாங்க. அதையெல்லாம் பார்த்துட்டுக் கேட்கக் கூடாது", தலையில் ஒரு கொட்டு வைக்கிறாள் அம்மா.
இந்துமதி கலங்கிய கண்களோடும், வீங்கிய முகத்தோடும், பள்ளிக்குச் சென்றாள். இடைவேளையில் ராஜி இல்லாதநேரம், அவளது பேனாவைத் திருடுகிறாள்.
இராஜி அழுதுகொண்டே "சார், சார் என் பேனாவைக் காணோம் சார்! எங்கம்மா அடிப்பாங்க சார்" என்றாள். தன் ஆசிரியரிடம் புகார் செய்தாள்.
இந்துமதியின் விழிகள் அங்கும், இங்கும் உருண்டோடின. அச்சம் அவளை, ஆட்கொண்டது. வாத்தியார் கார்த்திக் மிகவும் பண்பானவர்.
அவர் தனது மாணவர்களை விட்டு அனைத்துப் பைகளையும், சோதனையிடச் சொல்கிறார். இந்துவின் பையில் பேனா, இருப்பது தெரியவருகிறது. ஆசிரியர் இந்துவைத் தனியாக அழைத்து, "இந்து இங்க வாப்பா, நீ நல்லப்பிள்ளையாச்சே ஏன் இந்தத் தப்புப் பண்ணுன?"
இந்து அழுகிறாள். "சார், இந்த மாதிரி பேனா எங்கம்மாக்கிட்ட வாங்கித் தரச் சொன்னேன், சார். அம்மா, அதுக்கு இதெல்லாம் பெரிய இடத்துப் பிள்ளைங்க வச்சிருக்கது, நம்மெல்லாம் அதுக்கு ஆசைப் படக் கூடாதுன்னு, சொல்லுச்சு சார். ஏன் சார் நான் ஆசைப்படக் கூடாதா?" எனக் கேட்கும் அவள் கண்களில் ஏக்கம் தெரிகிறது.
ஆசிரியர் கார்த்திக், "ச்சே ச்சே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நம்மாலயும் வாங்க முடியும். ஆனா பிறர் பொருளுக்கு, ஆசைப் படக் கூடாது.
ஆனா உண்மையா இருக்கணும். இல்லைன்னா, சாமி நம்மளத் தண்டிக்கும் திருடுனாப் படிப்பு வராது!
நீ விரும்புற பொருட்களையெல்லாம் வாங்க முடியும் எப்போ தெரியுமா?
நீ நல்லாப் படிச்சு, வேலைக்கு வந்தா, நீ விரும்புற பொருட்களையெல்லாம் வாங்கலாம்" என்னும் ஆசிரியரின் வார்த்தைகள் இந்துவின் காதில் எதிரொளிக்கின்றன...
கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் அந்தப் பெண்மணியைத் தேற்றத் துவங்கினாள்.

Tuesday, January 12, 2016

தவறு எங்கே நடந்தது?

ணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கீதா ஸ்கூட்டியின் வேகத்தைக் கூட்டினாள். தவசி நகர் திருப்பத்தில் வேகமாக திருப்பவும் சிறு கல் முன் சக்கரத்தை பதம் பார்த்தது. தடாலென்று கீழே வண்டியோடு சாய்ந்தாள்.

எதிர்வீட்டிலிருந்த கமலாம்பாள் ஓடிவந்து அவளைத் தூக்க முயன்றாள். வயது மூப்பில் தளர்ந்த உடலால் இதெல்லாம் சாத்தியமா? நல்லவேளை தெருவில் போன யாரோ வண்டியையும் அவளையும் தூக்கி விட்டனர். கைத்தாங்கலாய் கமலாம்பாள் உள்ளே அழைத்துச் சென்றாள். முகத்தை துடைத்துவிட்டு தண்ணீர் தந்து ஆசுவாசப்படுத்தினாள் சீதா சற்று தெளிவானாள். நல்லவேளை தோளில் தொங்கிய ஹாண்ட்பேக் டேபிள்மேல் வைக்கப்பட்டிருந்தது. எடுத்து செல்லை உசுப்பி அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு விசயத்தைச் சொல்லி ஒருமணி நேரம் பர்மிஷன் கேட்டாள்.
பேசி முடித்ததும் கமலாம்பாள் காப்பியை நீட்டினாள் நிமிர்ந்து வாங்கிய போது சுவரில் தெரிந்த போட்டோ அவளை அதிர வைத்தது.
"இது யாரும்மா?" கீதா கேட்டாள்.
"இது எம் பையன் விஷ்ணு. அம்பாள் இண்டஸ்ட்ரீஸ்லே வேலை பாத்துண்டிருந்தான். என்ன பொல்லாத காலமோ கம்பெனில கட்டச் சொல்லிக் கொடுத்த ரெண்டு லட்ச ரூபாய பேங்க்ல கட்டினானாம்.. ஆனா அவா கம்பெனிக் கணக்குலே வரவு வர்லேன்னு சஸ்பெண்ட் பண்ணீட்டா. ஒரு வாரமாச்சு பாவம் பைத்தியமா அலையறான்."
"விஷ்ணுவை எனக்கு நல்லாத்தெரியும் அப்படிபட்ட ஆளு இல்லை. எங்கயோ தவறு நடந்திருக்கு. அவர் பணம் கட்டினது எங்க பேங்க்லதான்.. இவ்வளவு சீரியஸாகும்ணு நினைக்கலை நீங்க கவலைப்படாதீங்க. உடனே இந்தப் பிரச்சினையைக் கவனிக்கறேன்."
"எப்படியோ தாயி அந்தக் கடவுள்தான் உன்னை அனுப்பிச்சிருக்கார். நிச்சயம் ஒரு வழி பொறக்கும்."
கீதா கிளம்பினாள்.
பேங்க் மும்முரத்திலிருந்தது. கீதா தன் சீட்டில் அமர்ந்தவுடன் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ்க்கு போன் செய்தாள். கம்பெனி முதலாளிதான் பேசினார்.
பணம் காணாமல் போன தேதியும் தொகையும் கணக்கு எண்ணையும் கேட்டுக் குறித்துக் கொணடாள்.
அடுத்து அதே தொகை, அதே தேதியில் வேறு யாருக்காவது வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கம்ப்யூட்டரின் பற்களை பதம் பார்த்தாள்.
அடுத்தசில நிமிடங்களில் அது உண்மையைக் கக்கி விட்டது. அம்பாள் இஞ்சினீரிங்ஸ் என்ற கம்பெனிக்கு அதே தொகை அதே தேதியில் வரவு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கம்பெனியை அழைத்துக் கேட்டதில் அவர்கள் அந்த தேதியில் வேறு தொகைதான் கட்டப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். விஷயம் இதுதான் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கணக்கு எண் 1300023 ஆனால் அம்பாள் இஞ்சினியரிங்ஸ் கணக்கு எண் 1300032. பிங்கரிங் மிஸ்டேக். சம்மந்தப்பட்ட அதிகாரியை அழைத்து ட்ரன்ஸ்பர் என்டரி போடச் சொல்லி உத்திரவிட்டாள். பணம் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
மீண்டும் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் முதலாளியை அழைத்தாள்.
"சார் உங்க கணக்கில பணம் வரவு வச்சாச்சு. பாவம் சார் விஷ்ணு நல்ல மனுசன் இதில அவரோட தப்பு எதுவுமில்லே ரொம்ப புவர்பேமலி அவர் அம்மாவப் பார்த்தேன். முகத்தில மூக்குத்தி தவிர வேற எதுவுமில்ல இவுங்களா திருடியிருப்பாங்க."
"சாரிம்மா இவ்வளவுதூரம் நீங்களே சொல்லும் போது நா மறுப்பேனா இதோ இப்பவே சஸ்பென்சன் ஆர்டரை கேன்சல் பண்றேன்." என்றார் அவர்.
அடுத்த அரைமணிக்குப் பின் விஷ்ணு நன்றி சொல்ல கீதாவின் அறைக்கு வெளியே காத்திருந்தார்.

Monday, October 5, 2015

பாறையில் வளர்ந்த செடி


சொந்தமாக தொழில் தொடங்க வெளியூருக்கு சென்றான். மகேஷ், சென்ற
இரண்டு வாரத்திலேயே மீண்டும் வீட்டுக்கே திரும்பி வந்தான். இனிமேல்
வேலைக்கு போக மாட்டேன்என்று முடிவு செய்திருந்தான்.

    இதையறிந்த தாத்தா, மகேஷ் திரும்பி வந்ததற்கான காரணத்தைக் கேட்டார்.
தாத்தா தொழில் செய்கிற இடம், சூழ்நிலை எதுவுமே சரியல்ல, தொழில் பண்ண
எனக்கும் திறமை போதாது தாத்தாஎன்றான் மகேஷ்.

    தாத்தா அவனை கூட்டிக்கொண்டு தோட்டத்தில் இருந்த பாறையை காட்டினார்.
அந்த பாறையின் இடையில் ஆலமரச் செடி முளைத்திருந்தது.

    அதைக் காட்டி, ‘ஒருமரம் வளர நல்ல மண், நீர், காற்று, வெப்பம் அவசியம்.
ஆனால் இந்த செடிக்கு தேவையான எதுவுமே கிடைக்கல…. இருந்தாலும்,
முளைத்தே தீருவேன்னு முயற்சி செய்து பாறையிலே வளர்ந்திருக்கு
பார்த்தாயா!”.

நீயும் எதையும் தடை என்று காரணம், காட்டாதே முன்னேறுவேன் என்று
முயற்சியோடு, உழைச்சாலே எதிலேயும் வெற்றி பெறலாம்என்றார் தாத்தா

நம்பிக்கையோடு தொழில் தொடங்க கிளம்பினான் மகேஷ்.

Thursday, September 24, 2015

விவசாயியின் கோழிசந்தைக்குப் போன விவசாயி ஒருவர், தனது தோட்ட காய்கிறகளை விற்றுவிட்டு
வரும் வழியில் புததிதாக கோழி ஒன்றை வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்த கோழி
புதிய இடம் என்பதால் பயந்து பயந்து இரைகளைத் தேடி தின்றுக்
கொண்டிருந்தது. இதைக் கவனித்த விவசாயி, கோழியை கையில் பிடித்து
பாசமுடன் தடவி இரையூட்டினார். நாட்கள் கடந்தன. கோழியும் வளர்ந்து
பெரிதானது.

விவசாயியின் கோழியைப் போலவே பக்கத்து வீட்டில் ஒரு கோழி இருந்தது.
அந்தக் கோழி, விவசாயியின் கோழிக்கும் வைக்கும் உணவையெல்லாம் திருடித்
தின்று வந்தது. ஒருநாள் இதைப் பார்த்து விட்ட விவசாயியின் கோழி, சண்டை
போட ஆரம்பித்தது. இரண்டும் கடுமையாக மோதிக் கொண்டன.

இதைப் பார்த்த விவசாயி, பக்கத்து வீட்டுக் கோழியை விரட்டியடித்தார்.
இதன்பிறகு பக்கத்து வீட்டுக் கோழி எப்போதும் கிண்டல் அடித்துக் கொண்டும்,
வம்பு பேசிக் கொண்டும் சண்டைக்கு இழுத்துக் கொண்டே இருந்தது.
இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது
விவசாயியின் கோழி.

    கொஞ்ச நாட்;கள் கழித்து விவசாயியின் கோழி முட்டை வைத்து குஞ்சுப் 
பொறித்தது. தன்னுடைய கோழிக் குஞ்சுப் பொறித்தது. தன்னுடைய கோழிக்
குஞ்சுகளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தது. இதைப் பார்த்த பக்கத்து
வீட்டுக் கோழி மீண்டும் கிண்டல் செய்து, கோபமூட்டி வம்புக்கு இழுத்தது.

    ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த விவசாயிகள்  கோழி சண்டை போட ஓடியது.
ஓடிய வேகத்தில் கால்களை தூக்கியடித்து, சண்ட போட ஆரம்பித்தது. இந்த நேரம்
தனியே நின்ற குஞ்சுகளில் இரண்டு குஞ்சுகளைக் கழுகு தூக்கிச் சென்றது.
கோழிக் குஞ்சுகள் கதறும் சத்தம் கேட்ட தாய்க் கோழி, சண்டையை விட்டுவிட்டு
ஒடிவந்தது. ஆனால் அதற்குள் கழுகு குஞ்சுகளை உயரமாக தூக்கிச்
சென்றுவிட்டது.

மற்றக்குஞ்சுகளை சிறகுகளுக்குள் வைத்து காத்தது. தனதுசின்னக் கோபத்தால்
இரண்டு பிள்ளைகளை இழந்து விட்டோமேஎன்று நினைத்து கண்ணீர் விட்டு
அழுதது.

    கவலையாக இருந்த விவசாயியின் கோழி முன்பு  மீண்டும் ஏளனமாக பேசி
கிண்டல் செய்தது. பக்கத்து வீட்டுக் கோழி, என்ன செய்வதென்று தெரியாமல்
அமைதியாய் இருந்தது. விவசாயியின் கோழி. அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்
கோழி கதறும் கேட்டு, என்ன சத்தம் என்று விவசாயியின் கோழி பார்த்தது.

    அருகே அடித்து குழம்பு வைப்பதற்காக பக்கத்து வீட்டுக் கோழியை தூக்கிச்
சென்று கொண்டிருந்தார்கள்.

Wednesday, September 23, 2015

முள்ளுக்கும் திறமை உண்டு...

விவசாயி ஒருவருக்கு மலை அருகே தோட்ட்மிருந்தது. அதில் துளசி பயிர் செய்து
இருந்தார். துளசி செடிகளுக்கு இடையே முளைக்கும் களைகள், முட்செடிகள்
அகியவற்றை பிடுங்கி எடுத்து துளசி செடிகைள கண்ணும் கருத்துக பாதுகாத்து
வளர்த்து வந்தார்.
 ஒரு நாள் துளசி செடிக்கு இடைேய வள்ர்ந்து இருந்தஒரு முட்செடி செடி ஒன்றை
பிடுங்கி எறிந்தார். உடனே அந்தமுட்செடி கண்ணீர் விட்டு அழுதது.விவசாயி
அந்தமுட்செடியிடம் சென்டற போது அது சொன்னது
'' நான் தான் யாருக்குமே பயன்படபோவதில்லையே. எந்ததிற்மையும் இல்லாத
என்னை ஏன் கடவுள் படைத்தார்.'' எனவருத்தப்பட்டது.
  ''கடவுள் யாரையும் காரணம் இல்லாமல் படைப்பதில்லை.எலோருக்கும்
திற்மையும், பலத்தையும் கொடுத்து இருக்கிறார். அதை நாம் தான் கண்டுபிடித்து
யன் படுத்தவேண்டும்'' என்று விவாசயி சொல்ல..
 
      ''என்னதிறமை இருக்கபோகிறது எங்கிட்ட‌, நானோ முட்செடி பிற்ரை
காயபடுத்துவேனோ   தவிர‌, வேரு யாருக்கும் உதவியாகஇருக்கமாட்டேன்'' 
என்று தன்னை இழிவாக பேசியது.
  மறுநாள் விவசாயி தன் தோட்டைத்திலிருந்தது பிடுங்கி எறிந்தமுட்செடிகளை
எல்லாம் ஒன்று சேர்த்து  தோட்டைத்தை சுற்றி  வேலி அமைத்தார்.
 பின்பு அந்தமுட்செடியிட்ம் சென்று, '' நீ முட்செடி தான்  பிறறை
காயப்படுத்துபவன் தான். ஆனால் உன்னிடமும் திறமை இருக்கிறது பலமும்
இருக்கிறது. அதனால் தான்  இன்று இந்ததோட்டைத்தையே பாதுகாக்கும்
காவல்கார வேலியாக உயர்ந்துவிட்டாய்'' என்று விவசாயி சொல்ல..
   கடவுள் படைத்த எல்லா உயிர்களுக்குமே  திறமையும் பலமும்  உண்டு என்பதை
உணர்ந்தது முட்செடி .