எதிர்பார்ப்புக்களுடன் கூடிய காலை.கதிரவன் மென்மையான மேகங்களை கிழித்துக் கொண்டு கண் விழித்தான்.ஏதோ ஒரு புரியாத ஆனந்தம் மாணவனாக நுழைந்த பாடசாலையில் நானும் ஒரு ஆசானாக நுழையப் போகிறேன் என்று...,நான் பிறந்த 25 வருடங்களில் எனக்காக விடிந்த விடியல் இன்று.பல கேள்விகள் என் மனதை அங்குமிங்கும் ஊசலாடிக் கொண்டதான் இருந்தது எல்லையில்லாமல்....,வாசல் கதவை திறந்து என் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு சாலையில் நான் செல்லும் போது என் அயலவர்கள்
இன்னாருடைய மகன் என்று என்னை அழைக்காமல் அழைக்கும் போது எனக்குள் ஏதோ ஓர் உற்சாகம்.
சைக்கிளை என்னை அறியாமலே என் கால்கள் வேகமாக உதைத்தது நான் என் நெடுநாள் கனவை எட்டி விட்டேன்.'பிஸ்மில்லாஹ்'என்ற வார்த்தையுடன் நுழைந்தேன்.பூகம்பம் என்னைத் தாக்கியதாய் உணர்ந்தேன்.என் மனதில் இனம்புரியாத ஓர் போராட்டம்.

என் கண்களை நம்பலாமா? என்ற உணர்வு.என் பள்ளி நண்பன் ரியாஸ் பாடசாலை வாயில் காவலாளி.
சிறிது நேரம் என் உணர்வுகளை துறந்தேன்.என் பாடசாலை நாட்கள் மீள என் கண் முன்னே!ரியாசும் நானும் பாடசாலையில் நெருங்கிய நண்பர்கள்.இலக்கிய அகராதியில் தோழனுக்கு பொருள் தேடினால் என் பெயரும் அவன் பெயரும் எழுதப்பட்டிருக்கும்.பாடசாலையில் நட்பென்று பேசப்பட்டால் அது நாங்கள் தான்.எங்கள் இதழில் புன்னகைக்கு பஞ்சமில்லை.கண்களில் ஆனந்த நதிகளும் ஊற்றெடுக்கும்.ரியாஸ் மிகவும் சுட்டியான மாணவன்.அதனால் நகைச்சுவையால் மற்றவர்களின் மனம் புண்படும் வண்ணம் நடந்து கொள்வான்.என்னிடமும் அப்படி நடந்ததுண்டு.ஆனால் எனக்கு அவன் மேல் எந்த மனக்கசப்பும் இல்லை.நாங்கள் நண்பர்கள் என்ற நேசம் அதை போக்கி விடும்.ஆனால் மற்றவர்களிடம் இப்படி பேசாதே என பல தடவைகளில் அவனிடம் கூறி வந்தேன்.அவன் குணம் மாறவில்லை.

இவ்வாறான நாட்களில் தான் நாங்கள் ரமேஷ் ஆசிரியரை சந்திக்க நேர்ந்தது.அவர் எங்களது தமிழ் பாட ஆசிரியர் மிகவும் சாந்தமானவர்,நல்லவர்,எல்லோருடனும் புன்னகைத்த முகம்.என்னுடனும் ரியாசுடனும் அவர் மிகுந்த அன்பு காட்டினார்.அந்த அன்பை எல்லை கடந்து மீறிச் சென்றான் ரமேஷ்.
வகுப்பறையில் ரமேஷ் ஆசிரியரை கேலி செய்வதும்,அவர் பாடங்களுக்கு சமுகமளிக்காமல் இருத்தல்,சமுகமளித்தால் மற்ற மாணவர்களுக்கு தொந்தரவாகவும் நடந்து கொண்டான்.ஆனாலும் ரமேஷ் ஆசிரியர் அவனை கடிந்து கொள்ளவில்லை.ரியாஸ் வறுமையான குடும்பப் பின்னணியை கொண்டவன்,ரமேஷ் ஆசிரியரும் அவ்வாறான நிலையில் இருந்து கடுமையான உழைப்புடன் சமுதாயத்தில் பெயர் சொல்லும் படி நடந்து கொண்டவர்,அதனால் ரியாசுடன் மிகுந்த அன்பும் அரவணைப்பும் காட்டினார்.இவ்வாறான ஒரு நாளில் தான் அந்த மனதை கசப்படையச் செய்யும் சம்பவம்
இடம்பெற்றது.

எதிர்பாரத விதமாக ரியாசை சந்தித்த ஆசிரியர் அவனுக்கு அறிவுரைகளை வழங்கினார்,அவனுக்கு யாரும் அறிவுரை சொன்னால் பிடிக்காது,வகுப்பறைக்குள் வேகமாக நுழைந்தான் ரியாஸ்.என்னோடும் பேசாமல் கோபமாய் இருந்தான்.

'டேய்! ரியாஸ் என்ன மச்சான் சாதியா இருக்கே?'

'ம்ம்...ஒன்னும் இல்லை அவன் எப்படி ................?'

'என்னடா நடந்தது விளக்கமாக சொல்லேன்?'

'ரமேஷ் பெரிய பருப்பா..?மச்சான் எனக்கு அறிவுரை சொல்லுறான்.'

'டேய்! ரியாஸ் ரமேஷ் ஆசிரியரை மரியாதை இல்லாமல் பேசாதே!!'அவர் எப்படி பட்ட மனுஷன் என்று உனக்குத் தெரியுமா? அவர் உன் மேல் வைத்த அன்பை நீ அறிவாயா?"

"பொல்லாத அன்பு தான் பாறேன் இன்றைக்கு அவருக்கு ஒரு வேலை செய்கிறேன்,இறக்கும் வரை மறக்காமலிருக்க.....?'

"மச்சான் அப்படியெல்லாம் ஒன்னும் செய்யாதே!"

'இவன் வேற போடா புத்தன் போல் பேசிக்கிட்டு இருக்காமே!"

என மனதுக்குள் பல கேள்விகள் எழுந்தது இறைவனை வேண்டினேன்.ரியாசிக்கு ஞானத்தை கொடு இறைவா! ரமேஷ் ஆசிரியருக்கு அவன் ஏதும் செய்யாமல் இருக்க..சிற்றூண்டிச்சாலை சென்று விட்டு வகுப்புக்குள் நுழைந்தேன்.ரமேஷ் ஆசிரியர் வகுப்பில் இருந்தார்.உள்ளே அனுமதி பெற்று நுழைந்த போது என இருதயமே நொறுங்கி விட்டது.கரும்பலகையில் இரு கேலிச்சித்திரங்கள் வரைந்து ஒன்றில் பெயர் எதுவும் இல்லாமலும் மற்றையதில் ரமேஷ் என்று எழுதி அடைப்பில் காவலாளி எனவும் பொறித்து பின்வரும் வாசகம் எழுதப்பட்டிருந்தது,

"தமிழை போதிக்கும் ஆசான்
காவலாளியாய் இருந்தால்
வாசல் துறந்து கொண்டிருப்பான்
அவன் என்ன இறைவனா?
அறிவுரையால் உலகை திருத்த.."

ரமேஷ் ஆசிரியரை கண்ணெடுத்து பார்த்தேன்,நொறுங்கி போய் இருந்தார்.அவர் மீது எனக்கு ரொம்ம பிரியம் அதனால் கண்ணீரும் வந்துவிட்டது,நானும் இடத்தில் அமர்ந்து கொண்டு மெளனம் காத்தேன்.
வகுப்பே ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கி இருந்தது.ஆனால் ரியாஸ் மட்டும் சிரித்துக் கொண்டும் எதையோ?
சாதித்தது போல் முறுவலுடன் காணப்பட்டான்.அவன் மீது நான் கொண்ட நட்பும் அன்றோடு என்னை விட்டு விலகி விட்டது.பல தடவை பேச முயற்சித்தான்.ரமேஷ் ஆசிரியரிடம் மன்னிப்பு கோறச்சொன்னேன்.மாட்டேன் என்று வாக்குவாதம் பண்ணினான்.நானும் உன்னோடு பேசமுடியாது என்று முடிவாய் சொல்லி விட்டேன்.பழைய நினைவுகள் கண்களில் கண்ணீராக தோன்ற என தோள் மேல் யாரோ? கை வைத்தது உணர்ந்தேன்.மீண்டும் நினைவுக்கு வந்தேன்.

திரும்பிப் பார்த்த போது ரியாஸ் சேர்! சுகமா இருக்கீங்களா? என்று என்னிடம் வேறு யாரையோ? போல் விசாரித்தான்.என்ன சொல்லுறது என்று புரியவில்லை.தலையை எந்தப்பக்கம் ஆட்டுவது என்று தெரியாமல் ஜாடை காட்டி விட்டு ஒரு வழியாக நூலகத்திற்குள் சென்றேன்.காரணம் இன்னும் ஒரு நொடி
நான் அங்கிருந்திருந்தால் அவன் புயங்களை பற்றி அழுது விடுவனோ?என்று.....,இன்றைய தினசரி
பத்திரிகையை படிக்கும் போது கொற்றை எழுத்துக்களால் எழுதப்பட்ட செய்தியை விட குன்றிமணியளவான எழுத்துக்களால் எங்கள் ஊரில் பிரபலமான கவிஞர் ஒருவரால் ஒரு சில வரிகள்
எழுதப்பட்டிருந்தது,படித்தேன் வியப்படைந்தேன்.என் தோழனினதும் எனது வாழ்க்கையையும் தழுவிய இருந்தது அவ்வரிகள்...,என்ன மாயம் என்றே புரியவில்லை.தலையும் கடுமையாய் வலிக்கிறது,முதல் நாளே அரை நாள் லீவு கேட்டு போனால் என்னை மற்ற ஆசிரியர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்தாலும் என்னால் வீடு செல்லாமல் இருக்க முடியவில்லை.எத்தனை தடவை மனதை விட்டு அவ்வரிகளை அழிக்க முயன்றாலும் அழியாமல் நெஞ்சில் காயமானது அந்த வரிகள்....

"சிரம் பணித்தவன்
சமுதாயத்தில் தலை நிமிர்ந்தான்.
தீண்டாமை விதைத்தவன்
வாழ்க்கை கேள்விக்குறியானது.
வினை விதைத்தவன்
வினை அறுப்பான்
திணை விதைத்தவன்
திணை அறுப்பான்"